AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AI AIRPORT SERVICES LIMITED) நிறுவனத்தில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு Fixed Term Contract basis முறையில் நிரப்பப்படுவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


Utility Agent Cum Ramp Driver -130


Handyman/ Handywoman -292


சென்னை விமான நிலையத்தில் உள்ள பணியிடங்கள் இந்த அறிவிப்பும் மூலம் நிரப்பப்பட உள்ளது.


கல்வித்தகுதி: 


ஓட்டுநர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 வயது மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


Handyman/ Handywoman: ரூ. 24,960/-


Utility Agent Cum Ramp Driver - ரூ.22,530/-


தேர்வு செய்யப்படும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/- என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:


Office of the HRD Department,


AI Unity Complex,


Pallavaram Cantonment,


Chennai -600043


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்


Utility Agent Cum Ramp Driver: 02.05.2024


Handyman : 04.05.2024


விண்ணப்பக் கட்டணம்: நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு ( payable at Mumbai) AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் Demand Draft எடுக்க வேண்டும். 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.