நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 




இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், புதிதாக 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் (CEN No.02/2024) வெளியிடப்பட்டுள்ள விவரங்களை காணலாம்.



பணி விவரம்


அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot ) 


கல்வி மற்றும் பிற தகுதிகள் 



  • இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃபிட்டர், எலக்ட்ரீசியன், ஹீட் இஞ்சின், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்




 


ஊதிய விவரம்


இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும்.


தெரிவு செய்யப்படும் முறை 


ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


ஆன்லைன் கணினி தேர்வு பாடத்திட்டம்




விண்ணப்பிக்க கடைசி நாள் - 19.02.2024  23.59 மணி வரை 




இணையதள விவரம்




இது தொடர்பாக எழும் சந்தேகங்கள் குறித்து அறிய  தொடர்ப்பு கொள்ள --இ-மெயில்: rrbhelp@csc.gov.in


தொடர்பு : 9592001188 (அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.)


வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய https://www.rrbchennai.gov.in/downloads/cen-01-2024/Detailed_CEN_01_2024_English_final_1900_hrs.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


கடந்த 2018-ம் ஆண்டு 64,371 பணியிடங்கள் ரயில்வே துறையில் நிரப்பப்பட்டன. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பணியிடங்கள் 5696. இன்னும் அதிகமான பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்படும். வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் குறித்து அறிய  https://www.rrbchennai.gov.in/ - என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும் அப்டேகளை தொடர்ந்து கண்காணிக்கவும் என்றும் ரயில்வே பணியாளர் வாரியம் தெரிவித்துள்ளது.


2,860 அப்ரெண்டிஸ் இடங்கள்


தெற்கு ரயில்வேயின் (Southern Railway) கோயம்புத்தூர், பெரம்பூர், திருவனந்தபுரம், பாலகாடு, சேலம், அரக்கோணம், ஆவடி,தாம்பரம், ராயபுரம் சென்னை, பொன்மலை, மதுரை,  ஆகிய கோட்டங்களில் ரயில்வே பணிமனைகளில் மாத உதவித்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship)  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதன் மூலம் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை ஆய்வகம் மற்றும் பணிமனைகளில் உள்ள எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.


டீசல் மெக்கானிக், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், வயர் மேன், பெயிண்டர், உள்ளிட்ட பணியிடங்களுக்கும், மருத்துவ ஆய்வகத்தில் உள்ள ரேடியாலஜி, இதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் ஆய்வக உதவியாளர் ஆகிய துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10 + 2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் வாசிக்க..