ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலை தேடுபவர்களுக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது RRB-யால் நடத்தப்படும் குரூப் டி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2025: காலியிடங்களின் எண்ணிக்கை


இந்த RRB ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, பொறியியல், மெக்கானிக்கல், S&T மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் உள்ள பணியிடங்கள்  இதில் அடங்கும். இதில், போக்குவரத்துத் துறையில் 5,058 பாயிண்ட்ஸ்மேன்-பி பணியிடங்களும், பொறியியல் பிரிவில் 799 டிராக் மெஷின் உதவியாளர் பணியிடங்களும், 13,187 டிராக் மெயின்டெய்னர் கிரேடு IV பணியிடங்களும் உள்ளன. மேலும், உதவியாளர் (பிரிட்ஜ்) பணிக்கான 301 பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் உதவியாளர் (சி&டபிள்யூ) 2,587 காலியிடங்களும், உதவியாளர் (லோகோ ஷெட்-டீசல்) 420, உதவியாளர் (ஒர்க்ஷாப்) 3,077 பணியிடங்களும் நிரப்பப்படும்.


மின்துறையில் 1,381 உதவியாளர் டிஆர்டி மற்றும் 950 அசிஸ்டெண்ட் லோகோ ஷெட் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்கள் மற்றும் பிற பல்வேறு பணிகளுக்கான நியமனங்களும் செய்யப்படும். இந்த ஆட்சேர்ப்பில் ஒட்டுமொத்தமாக 32,438 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: 


இந்த குரூப்-டி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது NCVT-இலிருந்து தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். வேட்பாளரின் வயது ஜூலை 1, 2025 இன் படி 18 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும். RRB விதிகளின் கீழ் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்:


இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க, பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும், அதில் ரூ. 400 கணினி அடிப்படையிலான தேர்வுக்கு (CBT) தோன்றும் போது திருப்பித் தரப்படும். மறுபுறம், எஸ்சி, எஸ்டி, இபிசி, பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ. 250 செலுத்த வேண்டும், அவர்கள் தேர்வில் தோன்றினால் செலுத்திய முழுமையாகத் திரும்பப் அனுப்பப்படும்.


RRB 2025 தேர்வு முறை


RRB குரூப்-டி ஆட்சேர்ப்பு தேர்வானது  கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-1), உடல் திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியது. CBTயில் நான்கு முக்கிய பிரிவுகள் இருக்கும்.


பொது அறிவியல்: 25 கேள்விகள்
கணிதம்: 25 கேள்விகள்
பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு: 30 கேள்விகள்
பொது விழிப்புணர்வு: 20 கேள்விகள்
ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும், அதே நேரத்தில் சரியான பதிலுக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது: 


ஆர்ஆர்பி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வேயின் கீழ் இந்த CEN( Centralised Employment Notification )இல் அறிவிக்கப்பட்ட அனைத்து பதவிகளுக்கும் ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு ரயில்வேக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்வேக்கு விண்ணப்பித்தால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இந்த CEN இன் கீழ் ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முயற்சித்தால் தகுதி நீக்கம் மற்றும் வெளியேற்றம் செய்யப்படுவார்கள் 


வழிமுறைகள்:


1: அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.rrbcdg.gov.in/  பார்க்க வேண்டும்.


2: 'புதிய பதிவு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.


3: தேர்வுக்கு பதிவுசெய்து, பெயர், பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயர், தாயின் பெயர், ஆதார் எண், SSLC/மெட்ரிக் பதிவு எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி போன்ற தேவையான தகவல்களைச் சமர்ப்பித்து, பதிவுப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். .


4: பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை OTP மூலம் சரிபார்க்க வேண்டும்.


5: பதிவு எண் மற்றும் பாஸ்வர்ட்டை பயன்படுத்தி முகப்புப் பக்கத்தில் உள்நுழையவும்.


6: பகுதி I மற்றும் பகுதி II க்கான விண்ணப்பத்தை நிரப்பவும்



7: விண்ணப்ப விவரங்களை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நெட் பேங்கிங்/கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/UPI மற்றும் ஆஃப்லைன் சலான் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்லும்.


8: விண்ணப்பதாரர்கள் தேர்வின் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.




9: விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையின் விவரங்களை நிரப்ப வேண்டும்.


10: கட்டணத்தைத் திரும்பப் பெற வங்கி விவரங்களை உள்ளிடவும்.


11 விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை குறிப்பிட்ட வடிவமைப்பின் படி பதிவேற்ற வேண்டும் மற்றும் SC/ST தேர்வர்கள்  வகை சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.



இதையும் படிங்க: CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?


RRB ஆட்சேர்ப்பு 2025 முக்கிய தேதிகள்


விண்ணப்பம் தொடங்கும் தேதி: ஜனவரி 23, 2025
விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி: பிப்ரவரி 22, 2025


விண்ணப்பதாரர்களுக்கான ஹெல்ப்லைன்


ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு. (அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை) மின்னஞ்சல்: rrb.help@csc.gov.in தொலைபேசி: 0172-565-3333 மற்றும் 9592001188