தஞ்சாவூர்: 2025-ம் ஆண்டு ரயில்வேயில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு மாஸ் அறிவிப்பு வருதுங்க... விரைவில் வருதுங்க. 30 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் மூலம் ரயில்வே பணிக்காக காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதற்கான முன் அறிவிப்பு வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியன் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்ரவைசர், டைப்பிஸ்ட், கிளார்க், டிக்கெட் கிளார்க், டிரைன் கிளார்க் உள்ளிட்ட தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களான RRB NTPC தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இந்தாண்டு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயில் உள்ள தலைமை வணிகம் உடன் டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் உதவியாளர் மற்றும் தட்டச்சு செய்பவர், மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் பட்டப்படிப்பு தரத்தில் நிரப்பப்படுகிறது.

வணிகம் உடன் டிக்கெட் எழுத்தர், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர், ஜூனியர் கிளார்க் உடன் தட்டச்சர், ரயில் கிளார்க் ஆகிய பதவிகளுக்கான இடங்கள் 12-ம் வகுப்பு தரத்திலும் நிரப்பப்படுகிறது. இதற்கான நடத்தப்படும் தேர்வு தொழில்நுட்ப அல்லது பிரபல பிரிவுகள் (Non-Technical Popular Categories -NTPC) என குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சுமார் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் வரை நிரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டப்படிப்பு தகுதிக்கான பதவிகளில் 30,307 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி இளைஞர்களுக்கு மெகா ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் 2025-ம் ஆண்டுக்கான மெகா அறிவிப்பாக இத்தேர்வு பார்க்கப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகி, ஆன்லைன் வழியாக செப்டம்பர் 29 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டப்படிப்பு தகுதிக்கான NTPC Graduate (CEN 04/2025) மற்றும் 12-ம் வகுப்பு தகுதிக்கான NTPC Undergraduate (CEN 03/2025) என தனித்தனியாக வெளியிடப்படும்.

டிக்கெட் கிளார்க், தட்டச்சர், ரயில் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பு வரையே படித்தவர்கள் அதில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கும் மேல் படித்து இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 50% மதிப்பெண்கள் கட்டாயம் கிடையாது. தட்டச்சு பதவிகளுக்கு தட்டச்சு திறன் அவசியமாகும்.

டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் கணக்காளர் உடன் தட்டச்சர் மற்றும் சீனியர் கிளார்க் உடன் தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தேவை இருக்கும் பதவிகளுக்கு மட்டும் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். அதனால இப்பவே தயாராகிடுங்க.  இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாராக இருங்க வந்தவுடனேயே விண்ணப்பித்து விடுங்க. எதிர்பார்த்த வேலையில் சேர்ந்திடுங்க. பல மாதங்களாக காத்திருந்த அறிவிப்பு இதுதான் என்பதால் தேர்வுக்கு சட்டென்று ரெடியாகிடுங்க.