மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2024- ஆகஸ்ட் 4 அன்று நடத்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல்படை (உதவி கமாண்டன்ட்) தேர்வின் பகுதியான எழுத்துத் தேர்வு அடிப்படையில், உடல் தர சோதனை/ உடல் திறன் சோதனை/ மருத்துவ தர சோதனை ஆகியவற்றுக்கு தகுதிபெற்றவர்களின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


உதவி கமாண்டன்ட் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள்:


எழுத்துத் தேர்வில் தகுதிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் இணைய வழியாக விவரமான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கு முன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பொருத்தமான பக்கத்தில் தங்களை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


இவர்கள் தங்களின் தகுதிக்கு ஆதரவான சான்றிதழ்கள், ஆவணங்கள், ஒதுக்கீட்டு உரிமைகோரல் ஆகியவற்றுக்கு ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை ஆணையத்தின் http://www.upsc.gov.in  என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.


உடல் தகுதித் தேர்வு எப்போது?


விரிவான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க  விண்ணப்பதாரர்களுக்கு இ- அனுமதி அட்டை உரிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் வழங்கப்படும். உடல் தர சோதனை/ உடல் திறன் சோதனை/ மருத்துவ தர சோதனை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் ஆஜராகும் போது, இந்த இ-அனுமதி அட்டையுடன், சமர்ப்பிக்கப்பட்ட விரிவான விண்ணப்பப் படிவத்தின் அச்சு வடிவ பிரதியையும் அடையாள சான்றுக்கு ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றின் நகலையும் அளிக்கவேண்டும்.


விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வுகள்/ தேர்வு முடிவு தொடர்பான தகவலை / விளக்கத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய வளாகத்தில் உள்ள  சேவை மையத்தில் வேலை நாட்களில் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நேரில் சென்று பெறலாம், அல்லது (011) 23385271/ 23381125/23098543 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.