Repco Bank Recruitment :  நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான ரேப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர்/எழுத்தர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்கள் செயல்பட்டுவரும் வங்கிகளில் பணிபுரிய இளநிலை உதவியாளர்/எழுத்தர் காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

பணி குறித்த கூடுதல் விவரம்

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள  50  இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பணிக்கு நியமிக்கப்படுவர். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. வேலைவாய்பு குறித்த விவரத்தை காணலாம்.

பதவியின் பெயர்

இளநிலை உதவியாளர் (Junior Assistant/Clerk) 

காலி இடங்கள்

இளநிலை உதவியாளர், எழுத்தர் பணிகளுக்கு மொத்தம் 50 காலி பணியிடங்கள் உள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் 40, ஆந்திராவில் 4, கேரளாவில் 2, கர்நாடகாவில் 4 உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி 

இளநிலை உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாநில மொழி குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். வட்டார மொழிகளில் எழுதுதல், படித்தல், பேசுதல் ஆகியவற்றில் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க  21 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு மாதம் ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை ஊதியம் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை

ஆன்லைன் வழியில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அடுத்த மாதம் அல்லது அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முழு விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம் https://www.repcobank.com/uploads/career/Final%20Advertisement%202022.pdf

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினர் ரூ.900-யும், பழங்குடியின/பட்டியலின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் ரூ.500-யும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

இந்த மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி  25.11.2022  ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/rbjaoct22/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  அறிவிப்பின் விவரம் அறிய https://www.repcobank.com/uploads/career/Final%20Advertisement%202022.pdf  என்ற லிங்கை கிளிக் செய்யவும்.