சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள மொத்தம் 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை ஆட்சியர் தெரிவித்து உள்ளதாவது:

வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை (ம) இன சுழற்சி விவரம் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும்.

அக்.1 கடைசி

மேற்படி பணிக்கான விண்ணப்பத்தினை https://chennai.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து 01.09.2025 முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 01.10.2025 மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான காலிப்பணியிட விவரம், கல்வித்தகுதி, இதரத்தகுதிகள் மற்றும் இனச்சுழற்சி குறித்த விவரங்களை https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி

தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி (SSLC Secondary School Leaving Certificate Examinations) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Secondary ( SSLC School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிற தகுதிகள்

  1. விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  2. தமிழில் பிழையின்றி வாசித்தல் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  4. உடற் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  5. மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  6. விண்ணப்பதாரர் மீது எவ்வித வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது. பணி நியமனத்திற்கு விண்ணப்பதாரருடைய ஒழுக்கமும் முன்வரலாறும் தகுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

வயது வரம்பு (01.09.2025 படி) 

குறைந்தபட்ச வயது -21 வயது (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்ச வயது - 32 வயது -இதர வகுப்பினர்.

-37* வயது - பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் /பட்டியலினத்தவர் / பழங்குடியினர்.

(*அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை நாள்.13.09.2021-படி வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது)

மாற்றுத்திறனாளிகளுக்கு -அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும். (Tamilnadu Government Servants (Conditions of Service) Act-2016)

முன்னாள் இராணுவத்தினருக்கு

48 வயது - இதர வகுப்பினர்.

53 வயது -பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் /மிகவும் /சீர்மரபினர் பட்டியலினத்தவர் / பழங்குடியினர். (Tamilnadu Government Servants (Conditions of Service) Act-2016).

* விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.

மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவங்களை https://chennal.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியை அணுகி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/09/17567143686664.pdf என்ற இணைப்பிலும் பெறலாம்.

ஊதிய விவரம்

Special Time Scales of Pay Matrix (சிறப்பு காலமுறை ஊதியம்) Level 06 (ரூ.11,100 ரூ.35,100/-)

நிபந்தனைகள்

விண்ணப்பங்கள் எவ்வகையிலும் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.

தமிழ் வழியில் படித்தவர்களாக இருந்தால் தமிழ் வழி கல்வி சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வில் இன சுழற்சி விதிகள் பின்பற்றப்படும்.

விண்ணப்பதாரர் அளித்த ஆவணங்கள் / விவரங்கள் பின்னாளில் ஏதேனும் போலியானவை என தெரியவரும்பட்சத்தில், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தகுதியான விண்ணப்பதார்களுக்கு மட்டும் மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் / எழுதுதல், திறனறித் தேர்வு. மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றிற்கு தனித்தனியே கடிதம் அனுப்பிவைக்கப்படும்.

திறனறித் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு வருகை தர போக்குவரத்து செலவினம் ஏதும் வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை தபால் / அஞ்சல் மூலம் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பும்போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் எனில், தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நலவாரியத்தால் வழங்கப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் அனைத்து சான்றுகளிலும் சுயசான்றொப்பம் (Self Attested) செய்திருக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.