தேனி மாவாட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டும் வரும் அலுவலகத்தில் சமூக பணியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

சமூகப் பணியாளர் (Social Worker)

கல்வி மற்றும் பிற தகுதிகள்

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகவியல், சமூகப்பணி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

குழந்தைகள் நலன் / சமூக நலன் சார்புடைய பணிகளில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமான ரூ.18,536/- வழங்கப்படுகிறது.  

பணிகாலம்

இது ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆகும். 

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு தகுதியுள்ளவர்கள்  https://theni.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - IIமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.தேனி - 625531

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023

வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காண  https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2023/10/2023103155.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

நகர்ப்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர்

மருந்தாளுநர் (Pharmacist)

ஆய்வக  நுட்புநர் (Lab Technician)

பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்

கல்வித் தகுதி

நகர்ப்புற சுகாதார மேலாளர் எம்.எஸ்.சி, நர்ஸிங் படித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

மருந்தாளுநர் படிப்புக்கு Pharmacist துறயில் இளங்கலை பட்டம்,  டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு ஃபார்மசி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக நுட்புநர் பணிக்கு மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு எட்டாவது படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்

பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

  • நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதர செவிலியர் - ரூ.25,000/-
  • மருந்தாளுநர் (Pharmacist) - ரூ.15,000/-
  • ஆய்வக  நுட்புநர் (Lab Technician) - ரூ.13,000/-
  • பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் ரூ.8500/-

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி ஆவணங்களுடன் நேரிலோ / விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி - 

 செயலாளர் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்மாவட்ட நலவாழ்வு சங்கம்,மாவட்ட ஆட்சியர் வளாகம்,மதுரை - 625 014

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய, கூடுதல் விவரங்களை அறிய  https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/11/2023110166.pdf - என்ற இணைப்பை கிளிக் செய்து காணவும்.

கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/11/2023110141.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.