ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்
மருத்துவ உதவியாளர் (Pharmacists)
கல்வித் தகுதி:
- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10+2 முறையில் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ’Pharmacy’ பிரிவில் டிப்ள்மோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரி அகியவற்றில் இருந்து (B. Pharm) in Pharmacy-யில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- மகாராஷ்டிரா மாநில ஃபார்மசி கவுன்சிலில் பதிவு செய்பவராக இருக்க வேண்டும்.
- இதற்கு விண்ணப்பிக்க இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம் வேலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.2000 வரை பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி காலம்:
இதற்கு 240 நாட்கள் ஒப்பந்த, அடிப்படையிலான வேலை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கிடைப்பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://www.rbi.org.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி -10.04.2023
இது தொடர்பான முழு அறிவிப்பினை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EPCHRM2103202308A19E987C344B5681646382D913E751.PDF- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
Jactto Geo: ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து மனிதச் சங்கிலி போராட்டம்- தலைமைச் செயலக சங்கம் அறிவிப்பு
ஆசியாவின் முதன்மையான குடல்நோயியல் மையம்... புதுச்சேரியில் தொடங்கப்பட்ட ஜெம் மருத்துவமனை..!