புதுச்சேரி பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (31.08.2024) கடைசி.



பணி விவரம்:


ஜூனியர் பொறியாளர் (சிவில்) - 99


Overseer - 69


மொத்த பணியிடங்கள்: 168


கல்வித் தகுதி:


ஜூனியர் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இந்தப் பணிக்கு புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


எழுத்துத் தேர்வு புதுச்சேரியில் நடைபெறும். 



எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:






விண்ணப்பிக்கும் முறை:


https://pwd.py.gov.in/notification-direct-recruitment-filling-vacant-post-junior-engineer-civil-and-overseer-public-works - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.08.2024


ஊதிய விவரம், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவங்களை தெரிந்துகொள்ள https://pwd.py.gov.in/sites/default/files/je-and-overseer-notification.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 




மேலும் வாசிக்க..


JOBS: 108 ஆம்புலன்ஸில் பணியில் சேர ஒரு வாய்ப்பு - முழு விபரம் இதோ


IBPS PO Recruitment 2024: 4,455 பணியிடங்கள்; ஐபிபிஎஸ் அரசு வங்கி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விவரம்!