செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார்.

Continues below advertisement

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 19.12.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.  

இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

Continues below advertisement

முக்கிய தகவல்கள் தெரிந்து கொள்வது எப்படி ?

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் மாபெரும் மற்றும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அனைத்து தகவல்களை வேலையளிப்போரும் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பான தகவல்களை வேலை நாடுநர்களும் பெறலாம்.

முகாமில் பங்கு பெற என்னென்ன தகுதிகள் வேண்டும்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் போன்ற கல்வித்தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 40வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், D-பிளாக்,தரைத்தளம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இம்முகாமில் நேரில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு (Employment registration card) ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.