புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பதிவாளர் வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பதிவாளர் ( Registrar)
காலியிடம் - 1
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் இருந்து ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
- Academic Level-11 -ல் உதவிப் பேராசிரியராக 15 ஆண்டுடுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் அல்லது Academic Level- 12-ல் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். கல்வி நிர்வாகத்தில் இணைப் பேராசிரியராகவும் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் இல்லையெனில், ஆராய்ச்சி நிறுவனம் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
- கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகத்தில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது துணை பதிவாளராக 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
பதிவாளர் பணியிடத்திற்கு மாத ஊதியமாக ரூ.1,44,200/- ஆக வழங்கப்படும்.
தேர்தெடுக்கும் முறை உள்ளிட்ட பிற கூடுதல் விவரங்களை அறிய https://recruitment.pondiuni.edu.in/-ம் என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
முகவரி:
The Assistant Registrar
Recruitment Cell
Pondicherry University
Dr. B.R. Ambedkar Administrative Building
R.Venkataraman Nagar
Kalapet
Puducherry – 605 014.
தொடர்பு எண்- 0413 – 2654567
மின்னஞ்சல் முகவரி - recruitment@pondiuni.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.09.2024 மாலை 5 மணி வரை
விண்ணப்ப கட்டணம் செலுத்திய ரெசிப்ட் விவரத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து 27.09.2024 -க்குள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.