பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
- அலுவலர்
- மேலாளர்
- மூத்த மேலாளர்
கிரெடிட், இண்டஸ்ட்ரி, சிவில் இஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல் இஞ்சினியர், ஆர்கிடெக்ட், பொருளாதாரம், டேட்டா சயின்டிஸ்ட், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஊதிய விவரம்:
- Officer-Credit- 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
- Officer-Industry- 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
- Officer-Civil Engineer- 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
- Officer-Electrical Engineer- 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
- Officer-Architect- 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
- Officer-Economics-36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
- Manager-Economics-48170-1740/1-49910-1990/10-69810
- Manager-Data Scientist- 48170-1740/1-49910-1990/10-69810
- Senior Manager-Data Scientist - 63840-1990/5-73790-2220/2-78230
- Manager-Cyber Security- 48170-1740/1-49910-1990/10-69810
- Senior Manager-Cyber Security- 63840-1990/5-73790-2220/2-78230
கல்வித் தகுதி:
இதற்கு பொறியியல் துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். நிதி துறை சார்ந்த பணிக்கு பட்டய கணக்கர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.டெக், படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இதற்கு விண்ணப்பிக்க 25 வயது நிரம்பியவர்களாகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு விவரம்:
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.50 கட்டணம் ஆகும். கட்டண தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். ஜி,.எஸ்.டி. கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பான முழு விவரத்தை https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=uFyK+ivvTvEdfSkpGeffiw== / என்ற இணையதள லிங்கை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி- 11.06.2023
மேலும் வாசிக்க..TN Rain Alert: அடுத்த 3 மணி நேரம்... 28 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போது மழை..! உங்கள் பகுதியில் எப்படி..?