மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பானது தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology). இந்த நிறுவனம் கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் கடல் வளங்களை உபகோகப்படுத்திக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.  தற்போது நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு தகவல் இடம்பெற்றுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இதில் தெரிந்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர்:



  • விஞ்ஞானி - எஃப் (2 - காலி இடங்கள்)

  • விஞ்ஞானி - இ (4 - காலி இடங்கள்)

  • விஞ்ஞானி - டி (9 - காலி இடங்கள்)

  • விஞ்ஞானி - சி (10 - காலி இடங்கள்)


மொத்தம் - 25 


கல்வித்தகுதி 


மேற்கண்ட பதவிக்கு ஏற்ற துறையில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.niot.res.in/documents/admin_advertisement/2023_regular/2023_regular_advertisement.pdf


வயது விவரம்


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபரின் 40 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும். இந்த வயது வரம்பானது அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுப்படும். இதனால் கூடுதல் விவரங்களை இந்த லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள். https://www.niot.res.in/documents/admin_advertisement/2023_regular/2023_regular_advertisement.pdf


சம்பளம்



  • விஞ்ஞானி  எஃப் பணிக்கு சம்பளமானது ரூ.1,31,100 முதல் 2,16,600 வரை இருக்கும். 

  • விஞ்ஞானி  இ பணிக்கு சம்பளமானது ரூ.1,23,100 முதல் 2,59,900 வரை இருக்கும். 

  • விஞ்ஞானி  டி பணிக்கு சம்பளமானது ரூ.78,800 முதல் 2,09,200 வரை இருக்கும். 

  • விஞ்ஞானி சி பணிக்கு சம்பளமானது ரூ.67,700 முதல் 2,08,700 வரை இருக்கும். மேலும் பணியை பொருத்து சம்பளம் மாறுபடும்‌.


விண்ணப்பிக்கும் முறை



  • முதலில்  | NIOT Chennai Recruitment 2023 | https://incois.gov.in/jobs/niot0423/signup.jsp என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • home page- ல் NIOT Chennai Recruitment 2023 என்றதை கிளிக் செய்ய வேண்டும்

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

  •  அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணிகளுக்குத் தகுதியானர்கள் நேர்காணால் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://www.niot.res.in/documents/admin_advertisement/2023_regular/2023_regular_advertisement.pdf


முக்கிய நாள்


மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 6ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க


IDBI Executive Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா..? 1036 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?


HVF Avadi Recruitment: 10-வது, டிப்ளமோ தேர்ச்சி போதும்! கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?