பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PUNJAB NATIONAL BANK) காலியாக உள்ள அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (24.02.2024) கடைசி தேதியாகும்.

 பணி விவரம்

அதிகாரி (Credit)

மேலாளர் (Forex)

மேலாளர் (Cyber Security)

மூத்த மேலாளார் (சைபர் செக்யூரிட்டி)

மொத்த பணியிடங்கள் - 1025

கல்வித் தகுதி 

  • அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க Chartered Accountant படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CMA படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 
  • மேலாளர் பணிக்கு எம்.பி,ஏ. அல்லது மேலாண்மை பணியில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Forex பயன்படுத்துவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • மேலாளர் பொறியியல், பி.டெட். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மூத்த மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.சி.ஏ., பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

இதற்கு 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

அதிகாரி (Credit) - ரூ.36,000

மேலாளர் (Forex) - ரூ.48,170

மேலாளர் (Cyber Security) - ரூ.48,170

மூத்த மேலாளார் (சைபர் செக்யூரிட்டி) - ரூ.63,840

எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு  ரூ.1180 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் / பழங்குடியின மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.59 கட்டணம் ஆகும். கட்டண தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

https://www.pnbindia.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.02.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=sybvSSMeHGNM5vnaIe0E6w== -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.