பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக பிஎஸ்என்ஸ்  நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான விபரங்களின் படி, தற்போதைய வாடிக்கையாளர்களின் தளம் 90 மில்லியனாக உள்ளது. இந்தியா முழுவதும் அனைத்திற்கும் பொருந்துவதான தொலைத் தொடர்பு சேவைகள், மின்னணு கைத்தொலைபேசி சேவைகள், இணையதளம், அறிவார்ந்த வலையமைப்பு, 3ஜி , ஐபிடிவி , எஃப்டிடிஹெச் போன்றவற்றை இந்தியா முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான், பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிவதற்குப் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும் நிலையில் தற்போது அப்ரன்டிஸ் பணிக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் பங்கேற்கும் மாணவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு தகுதியுடையவர்கள் எனவும் அதற்கானச் சான்றிதழ்களும் வழங்கப்படும். தற்போது அறிவித்துள்ள அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சிக் காலத்தில் உதவித்தொகையாக மாதம் 8  ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.





 


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 55


கல்வித்தகுதி – பொறியியல் துறையில் Electronics, E &TC, computer, IT ஆகிய ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு


பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 29.12.2021 தேதியின் படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வாயிலாக  ஆன்லைனில் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


தேர்வு செய்யும் முறை:


பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் மூலம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்சியின் போது மாதம் ரூபாய் 8 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை www.bsnl.co.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகத் தெரிந்துக்கொள்ளலாம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெற்றுக்கொள்ளுங்கள்…