தமிழக மீன்வளத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக உணவு வழங்குவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற மீனவப்பிரச்சனைகளை சரிசெய்து வருவதில் தமிழக மீன்வளத்துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. குறிப்பாக இத்துறையின் கீழ் அவ்வப்போது பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் தற்போது தமிழக மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்..
தமிழக மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள்:
தமிழக அரசு மீன்வளத்துறையில் 5 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் 01.07.2021 தேதியில் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
மத்திய, மாநில அரசு துறைகளின் கல்வி நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதோடு விண்ணப்பதாரர்களுக்கு மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.58,100 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மீன்வள மற்றும் மீனவர் நல ஆணையர்,
ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு,
மீன்வள அலுவலக வளாகம்,
நந்தனம்,
சென்னை -35
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்படும். இதனையடுத்து இப் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகும் தகுதியுள்ள நபர்கள் தான் தமிழக மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளராக நியமனம் செய்யப்படுவார்கள். இந்த நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்..
குறிப்பாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மறக்காமல் தங்களது விண்ணப்பத்தில், நேர்முகத்தேர்விற்குத் தொடர்புக்கொள்வதற்கு ஏற்றவாறு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைத் தவறாமல் குறிப்பிட்டிருக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.