NPCIL Apprentice Recruitment: கூடங்குளத்தில் மத்திய அரசுப் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

NPCIL Apprentice Recruitment: கூடங்குளத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

Continues below advertisement

மத்திய அமைச்சக்த்தின் கீழ் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணு சக்தி கார்ப்ரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு (டிரேடு அப்ரண்டிஸ்கள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Continues below advertisement

கூடங்குளம் அணு சக்தி திட்டம்

இந்தியாவின் அணு உலைகளை செயலிழக்க செய்தல் மட்டும் கழிவு மேலாண்மை, பிளாண்ட் ஆயுட்காலம் நீட்டிப்பு மற்றும் நவீனமயமாக்கல், புதுப்பித்தல், பராமரித்தல், ஆப்ரேஷன், இயக்குதல், கட்டுமானம், வடிவமைத்தல், சைட் செலக்‌ஷன் பெயருடைய அணு தொழில்நுட்பத்தில் எல்லா துறைகளிலும் விரிவான திறன் கொண்ட இந்திய அரசு, அணு சக்தி துறை கீழ் முன்னணி பொதுதுறை நிறுவனமாக அணு சக்தி கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் விளங்குகிறது.

பணி விவரம்:

டிரேட் அப்ரண்டிஸ்கள்

Fitter

Machinist

Welder (Gas & Electric)

Electrician

Electronic Mechanic

Pump Operator cum Mechanic

Instrument Mechanic

Mechanic Refrigeration and Air Conditioning

மொத்த இடங்கள் - 183

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, 10+2 என்ற வகையில் +2 முடித்தவர்கள் தகுதியானவர்கள்.

தேவையான துறையில் ஐ.டி.ஐ, தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 24-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை

இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் - ரூ.8855

ஓராண்டு கால ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் - ரூ.7,700

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு மதிப்பெண் அடிப்படைடில் மெரிட் பட்டியல் தயார் செய்யபடும். அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். பின்னர், தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.npcil.nic.in - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேவையான சான்றிதழ் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola