மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute – CECRI) காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

விஞ்ஞானி 

பணியிடம் - காரைக்குடி

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

விஞ்ஞானி பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வேதியயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வு இதழ்கள் எழுதியிருக்க வேண்டும்.

இயற்பியல், கெமிக்கல் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் எம்.டெக்., படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

ரூ.67,700 மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியலின/பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், சி.எஸ்.ஐ.ஆர். பணியாளர்கள், பெண்கள், ஆகியோருக்கு கட்டணம் செலுத்திவதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கி கணக்கு விவரம்:

Name of Account Holder: Director, CSIR–CECRI, Karaikudi

Account Number: 737253625

Bank Name: Indian Bank, A.C. Campus Branch, Karaikudi

IFS Code: IDIB000A008

MICR No.: 630019203

SWIFT Code: IDIBINBBMDN

விண்ணப்பிப்பத்து எப்படி?

https://www.cecri.res.in. - என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணபிக்க கடைசி தேதி - 31.07.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scitarecruit.cecri.res.in/Advt/Advt_02_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.