தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் என்பது நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இத்தேர்வை பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்நிறுவனத்தில் பிரிவு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அதில் 300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி ( பிப்ரவரி 15 ஆம் தேதி ) நாளையுடன் நிறைவடைகிறது. நாளை கடைசி நாள் என்பதால், வலைதளம் வேகமாக இயங்குமா என்பதை உறுதியாக கூற இயலாது. எனவே உடனடியாக விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பிக்கவும்.
Also Read: KVB Recruitment:டிகிரி முடித்தவரா?பிரபல வங்கியில் வேலை;விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்!
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் என்பது நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- www.newindia.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Quick Opportunities என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர் Recruitment section-ல் உள்ள dropdown menu என்பதை கிளிக் செய்யவும்
- NIACL Assistant என்ற லிங்க்கை கிளிக் செய்து New Registration என்பதை கிளிக் செய்யவும்
- கேட்கப்பட்டுள்ள பெயர், இ-மெயில் முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட தகவலை பதிவு செய்யவும்.
- புகைப்படம், கையொப்பம், இடது கை கட்டை விரல் ரேகை தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் வாசிக்க
- அடுத்ததாக ரூ. 850 கட்டணம் ( எஸ்.சி & எஸ்.டி பிரிவினருக்கு ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பணிக்கான தேர்வு முறையானது, இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமானது வருகின்ற மார்ச் 1-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமானது பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.