கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியாகும்.  தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள 'Relationship Manager', 'Credit Manager/ Credit Processing Officer', ’BRANCH RELATIONSHIP MANAGER' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பணி விவரம்:


Sales பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. 



  • ரிலேசன்ஷிப் மேலாளர் (Relationship Manager)

  • கிரெடிட் மேலாளர் / கிரெடிட் ப்ராசசிங் அதிகாரி (Credit Manager/ Credit Processing Officer',)

  • வங்கி கிளை ரிலேசன்ஷிப் மேலாளர் (Branch Relationship Manager)


கல்வித் தகுதி



  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விற்பனைப் பிரிவில் ஆர்வம் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

  • ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • கிரெடிட் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ. ஃபினான்ஸ், PGDM ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். வணிகவியல் பாடப்பிரிவை தெரிவு செய்து படித்திருக்க வேண்டும்.

  • கிரெடிட் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க 5-8 ஆண்டுகள் ரீடெயில் கிரெடிட் ப்ராசசிங் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • லோன் வழங்கும் நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆய்வு செய்யும் திறன் இருக்க வேண்டும். 

  • வங்கி கிளை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க  Banking / Bancassurance / NBFC ஆகிய துறைகளில் மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்
 
இதற்கு வங்கியில் கொள்கை, திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.


வங்கி மேலாளர் பணிக்கு CTC 8 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு 


இதற்கு அதிகபட்சமகா 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை


இந்த வேலைவாய்ப்புகளுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். அதோடு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்


விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.


விண்ணப்பிப்பது எப்படி?



  • கரூர் வைஸ்யா வங்கியின்  இணையதளமான Karur Vysya Bank - KVB-க்கு செல்லவும்.
    ’Career ‘என்பதை தேர்வு செய்யவும்.

  • அறிவிப்புகளை படித்து தெரிந்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

  • விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்; அல்லது https://www.kvb.co.in/- லிங்கை கிளிக் செய்து விவரங்களை காணலாம்.


கவனிக்க..



  • விண்ணப்பதாரர்கள் தங்களது தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

  • நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • இதற்கு விண்ணப்பிக்க ஆங்கிலம், மற்றும் தமிழ் மொழியில் நன்கு பேச எழுத தெரிந்திருக்க வேண்டும். 

  • இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கரூர் வைஸியா வங்கியின் கிளைகளில் நியமிக்கப்படுவர்.

  • சென்னையில் உள்ள கரூர் வைஸியா வங்கிகளிலும் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.karurvysyabank.co.in/Careers/docs/RM%20TFX__Posting_626.pdf  / https://www.karurvysyabank.co.in/Careers/docs/Credit%20Manager__Posting__625.pdf / https://www.karurvysyabank.co.in/Careers/docs/Eligibility%20Criteria%20-%20BRM.pdf - ஆகிய இணைப்புகளில் மூன்று வேலைவாய்ப்புகளுக்கும் தனியாக விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.


 விண்ணப்பிக்க கடை தேதி


வங்கி மேலாளர் பணி - 31.03.2024


கிரெடிட் மேலாளர் பணி - 02.03.3034


ரிலேஷன்சிப் மேலாளர் - 01.03.2024