திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறையில் லேப் டெக்னீசியன்,  பிசியோலாஜிஸ்ட், டிரைவர் போன்ற பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.


ஆய்வக உதவியாளர்- Lab Attendant


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் – மாதந்தோறும் ரூபாய் 8 ஆயிரம் என நிர்ணயம்.


லேப் டெக்னீசியன்


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருப்பதோடு, டிஎம்எல்டி ( லேப் டெக்னீசியன் கோர்ஸ்) முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் – மாதம் ரூபாய் 12 ஆயிரம்.


Microbiologist


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், எம்டி முடித்திருப்பதோடு, 2 ஆண்டுகள் கால பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


இதோடு மருத்துவம் நுண்ணுயிரியல் பிரிவில் எம்.எஸ்.சி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் – மாதம் ரூ. 40 ஆயிரம், ஆனால் எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் என நிர்ணயம்.





Psychologist


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் உளவியல், சமூகவியலாளர் பிரிவில் முதுநிலைப்பட்டம் அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருப்பதோடு 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் – மாதம் ரூ. 13 ஆயிரம்.


 தூய்மையாளர் பணி:


கல்வித்தகுதி – விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.


சம்பளம் – மாதம் ரூ. 6500


 


ஓட்டுநர் பணி :


கல்வித்தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் – மாதம் ரூ. 6,500 என நிர்ணயம்.


Multi purpose Hospital worker  பணிக்கு விண்ணப்பிக்கம் விண்ணப்பத்தாரர்களுக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.


சம்பளம் - மாதம் ரூ. 8,500


Dental Assistant – விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Pharmacist – இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – மாதம் ரூ.15 ஆயிரம்.


Refrigeration Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருப்பதோடு, குறைந்தபட்சம் ஒராண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப்பக்கத்தின் உள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


துணை இயக்குநர்,


சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம்,


துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,


16 22 பழைய போலீஸ் ஆஸ்பத்திரி சாலை,


பாளையங்கோட்டை


திருநெல்வேலி – 627 002


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.