நாட்டின் பொதுத் துறை நிறுவனமான NBCC இந்தியா லிமிடெடில் உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் வரை காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
- பொது மேலாளர் (Structual Desigh Civil)
- பொது மேலாளர் எலக்ட்ரிக்கல்
- பொதுமேலாளர் - Architecture ப்ளானிங்
- கூடுதல் பொது மேலாளர்
- துணை பொது மேலாளர்
- மேலாளர்
- திட்ட மேலாளர்
- துணை மேலாளர்
- துணை திட்ட மேலாளர்
- நிர்வாக பயிற்சி
- ஜூனியர் பொறியாளர்
கல்வித் தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க சிவில், எலக்ட்ரிக்கல், Architecture, மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துணை மேலாளர் சி.ஏ. ICWA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு கால பயிற்சி அளிக்கப்படும். ப்ரோபேசன் காலத்திற்கு பிறகே பணி நிரந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
- பொது மேலாளர் - ரூ.90,000 - ரூ.2,40,000/-
- கூடுதல் பொது மேலாளர் - ரூ.80,000/- - ரூ.2,20,000/-
- துணை பொது மேலாளர் - ரூ.70,000 - ரூ.2,00,000/-
- மேலாளர் - ரூ.60,000 - ரூ.1,80,000/-
- திட்ட மேலாளர் - ரூ. 60,000- ரூ.1,80,000/-
- துணை மேலாளர் (HRM ) - ரூ.50,000 - ரூ.1,60,000/-
- சீனியர் திட்ட செயலாளர் - ரூ.40,000 - ரூ.1,40,000/-
- ஜூனியர் பொறியாளர் - ரூ.27,270/-
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 49 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணபிக்க https://nbccindia.in/index- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு நேர்முகத் தேர்வு , கணினி முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி - 07.05.2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://nbccindia.in/pdfData/jobs/FinalDetailed_Advt_02_2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
SSC Recruitment:பொறியியல் படிப்பு முடித்தவரா? எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க!
Walk in Interview: டிகிரி படித்தவரா?கோவையில் வரும் 24ம் தேதி நேர்முகத் தேர்வு - முழு விவரம்!