திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre for Banana Trichy) உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Young Professional
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க (Visual Communication / Any Mass Media degree / Agricultural Extension and relevant degrees) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். கிடைக்கப்படும் விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு ‘ MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZE’ என்ற அளவில் சுயவிவர குறிப்பு, தேவையான சான்றிதழ் நகல், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி - nrcbrecruitment@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.01.2024
https://nrcb.icar.gov.in/documents/Recruitment/2024/January/media.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரத்தை காணவும்.
மத்திய அரசு வேலை; 19-ம் தேதி நேர்காணல்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Leather Research Institute, CLRI) சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
பணி விவரம்
Scientific Administrative Assistant
திட்ட உதவியாளர் (Project Assistant )
திட்ட உதவியாளர் ( Project Associate-I)
ஜூனியர் ஆராய்ச்சி உதவியாளர் (Junior Research Fellow)
சீனியர் ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)
கல்வித் தகுதி
சயின்டிஃபிக் நிர்வாக உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேதியியல், இயற்பியல், பயோகெமிஸ்ட்ரி, பயாலஜி உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் மற்றும் சீனியர் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருகக் வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
ஊதிய விவரம்
Scientific Administrative Assistant – ரூ.18,000/-
Project Assistant – ரூ .20,000/-
Project Associate-I –ரூ..25,000/-
Junior Research Fellow – ரூ.31,000ரு/-
Senior Research Fellow – ரூ.42,000/-
வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெறும் நாள் - 19.01.2024 காலை 9 மணி முதல்
வேலைக்கான நேர்காணல் நடைபெறும் இடம்:
Council Of Scientific And Industrial Research–Central Leather Research Institute (CSIR–CLRI)
265V+CMJ, Sardar Patel Rd,
near Indian Institute Of Technology,
CLRI Staff Quarters, Adyar, Chennai, Tamil Nadu 600020
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://clri.org/WriteReadData/Opportunity/836443563Notification%20No%201.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.