மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  தேசிய தகவல் மைய (National Informatics Centre) அலுவலகத்தில் உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

பணி விவரம்:

  • Scientist-‘B’
  • Scientific Officer/Engineer – SB
  • Scientific/Technical Assistant - ‘A’

மொத்த பணியிடங்கள் - 598 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • Scientist-‘B’ பணியிடத்திற்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்ப துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எல்க்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • Scientific Officer/Engineer – SB மற்றும்  Scientific/Technical Assistant - ‘A’   பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தொழில்நுட்ப துறையில் M.Sc. /MS/MCA/B.E./B.Tech ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • இதற்கு விண்ணப்பிக்க பணி அனுபவம் ஏதும் தேவையில்லை என்று அறிவிப்பில் தெர்விக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இது விண்ணப்பிக்க பழங்குடியின / பட்டியலின பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 வயது ஆகும். பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பொதுப்பணி துறையை சேர்ந்தவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Scientist-‘B’ Group ‘A’ (Gazetted) Level-10 ரூ. 56,100- ரூ.1,77,500)
Scientific Officer/Engineer – SB Group-B (Gazetted)  Level-7 (ரூ. 44,900- ரூ.1,42,400)
Scientific/Technical Assistant – ‘A’ Group-B (Non-Gazetted) Level-6 (ரூ. 35,400- ரூ.1,12,400)

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://www.calicut.nielit.in/nic23/ - என்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
 
விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.800 ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

பட்டியலின/ பழங்குடியின/ பொதுப்பணி துறை மற்றும் மகளிர் ஆகிய விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி- 04.04.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.calicut.nielit.in/nic23/documentformats/DetailedAdvertisement.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.  


மேலும் வாசிக்க..

IPL 2023 Opening ceremony: 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடக்க விழா.. அசத்தப்போகும் நட்சத்திரங்களின் முழு லிஸ்ட்..

இதையும் படிங்க..PM Modi degree: பிரதமர் மோடி பி.ஏ. படித்தாரா இல்லையா? அபராதம் விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!