திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • இளநிலை உதவியாளர்

  • தட்டச்சர்

  • பண்டகக் காப்பாளர்

  • ஆய்வக உதவியாளர்

  • பதிவரை எழுத்தர்

  • நூலக உதவியாளர்

  • அலுவலக உதவியாளர் 


கல்வித் தகுதி:


இளநிலை உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை தட்டச்சு அல்லது தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் முதுகலை தட்டச்சு இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பண்டகக் காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகியோர் எட்டாம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 18 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விண்ணப்பிப்பது எப்படி?


சுய விவரங்கள் அடங்கிய புகைபடத்துடன் கூடிய விண்ணப்பத்தில் சான்றொப்பம் அளிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


செயலர்,


தேசியக் கல்லூரி, (தன்னாட்சி)


கருமண்டபம்


திருச்சிராப்பள்ளி - 620 001


விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.09.2023


****


பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்


பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


நீலகிரி உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


சமூக நல தனியாளர் (Case Worker)


கல்வி மற்றும் பிற தகுதிகள்


சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.


உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும். சென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


வழக்கு அலுவலர்கள் - ரூ.15,000


பன்முக உதவியாளர்- ரூ.6,400


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


மாவட்ட சமூகநல அலுவலர்,


மாவட்ட சமூகநல அலுவலகம்,


மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம்,


பிங்கர்போஸ்ட், உதகை -643006


தொலைபேசி எண் - 0423 -2443392


விண்ணப்பிக்க கடைசி நாள் - 05.09.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2023/08/2023082692.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.