Coimbatore Job alerts:


கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப  நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ அலுவலர்கள் மற்றும்  மருத்துவ உதவியாளர்கள் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தற்காலிக வேலைவாய்ப்பு என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


பல் மருத்துவ அலுவலர்கள்
மருத்துவ உதவியாளர்கள்





 


கல்வித் தகுதி:


பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BDS பட்டப்படிப்ப்ய் தேர்ச்சி பெற்றும் Tamil Nadu Dental Council Registration செய்தும் இருக்க வேண்டும். 


பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணி தொடர்பாக குறைந்தபட்சம் ஓராண்டு காலம் பணி அனுபவம் இருத்தல் வேண்டும். 


ஊதிய விவரம்:


பல் மருத்துவ அலுவலர்  (Dental Surgeon) - ரூ. 34,000/ 
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) - ரூ. 13,800


வயது வரம்பு:


இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 35 -ற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


 பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்டசான்றிதழ்களின் நகல்களை இணைத்து 05.12 2022 அன்றுமாலை 5.00 மணிக்குள் பந்தையசாலையில் உள்ள துணை இயக்குநர்: சுகாதாரபணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 16.12.2022 காலை மணிக்கு 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்.



முகவரி:


துணை இயக்குநர்
சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் 
கோயம்புத்தூர்


விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2022


இது தொடர்பாக கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புன் லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம். https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/11/2022112242.pdf