தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகின்றன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மொபைல் ஆப் டெவலப்பர் (Mobile App Developer) பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்குப் பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரும்ப்பமுள்ளவர்கள் மார்ச் 24 வரை விண்ணப்பிக்கலாம்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்த மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு ஏற்ற செயலிகளை உருவாக்குதல், செயலி வேகம், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், செயலிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்தல் ஆகியவை கற்பிக்கப்படும். 210 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.






பயிற்சி எங்கே?


சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இதற்கான பயிற்சி அளிக்கப்படும்.


ஊதியம் எப்படி?


ஆரம்ப காலத்தில் மாதம் ரூ.35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3709