புதுடெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியத்தில் (NBEMS) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Continues below advertisement

மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை வாய்ப்பு 

மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியத்தில் (NBEMS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூனியர் அசிஸ்டென்ட், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுன்டன்ட், மருத்துவ துணை இயக்குநர் மற்றும் ஜூனியர் புரோகிராமர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விபரங்கள்:

இத்தேர்வு வாரியத்தில் மொத்தம் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்களின் வகைப்பாடு பின்வருமாறு:

Continues below advertisement
  • ஜூனியர் அசிஸ்டென்ட் (Junior Assistant) - 39 இடங்கள்
  • ஸ்டெனோகிராபர் (Stenographer) - 07 இடங்கள்
  • ஜூனியர் அக்கவுன்டன்ட் (Junior Accountant) - 04 இடங்கள்
  • மருத்துவ துணை இயக்குநர் (Deputy Director - Medical) - 02 இடங்கள்
  • ஜூனியர் புரோகிராமர் (Junior Programmer) - 01 இடம்

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடுகின்றன. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பி.இ (B.E), பி.டெக் (B.Tech) அல்லது முதுநிலை மருத்துவப் பட்டம் (Postgraduate Medical Degree) முடித்தவர்கள் வரை அந்தந்த பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அவர்கள் விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும், சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு 20.7.2026 அன்றைய தேதியின்படி, 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் தகுதியின்படி தேர்வு செய்யப்படுவர்:

எழுத்துத் தேர்வு (Written Examination)

திறன் தேர்வு (Skill Test)

சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி (General & OBC) பிரிவினர்: ₹1,500

எஸ்.சி, எஸ்.டி மற்றும் பி.டபிள்யூ.டி (SC, ST & PwD) பிரிவினர்: விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: ஜூலை 7, 2026

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31, 2026

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள் (தோராயமாக): செப்டம்பர் 5 மற்றும் 6, 2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான natboard.edu.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முன்பாக, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிப்பை முழுமையாகப் படித்து, கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டணச் சலுகைகள் மற்றும் இதர விதிகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.