மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் துறையில் பணிவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில், வரும் ஜனவரி 09-ஆம் தேதி மாபெரும் அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் குறித்த விரிவான தகவல்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் மற்றும் யூனியன் கிளப் ஆகியவை ஒருங்கிணைந்து இம்முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

* தேதி: 09.01.2026 (வெள்ளிக்கிழமை)

Continues below advertisement

* நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

* இடம்: யூனியன் கிளப் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை.

பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலிருந்தும் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 

* உற்பத்தித் துறை

* சேவைத் துறை

* விற்பனை 

* சந்தைப்படுத்துதல் 

உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளன.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்

* வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

* கல்வித் தகுதி:  5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.

 * ஐடிஐ (ITI) மற்றும் டிப்ளமோ (Diploma) முடித்தவர்கள்.

* பி.இ (B.E) உள்ளிட்ட அனைத்து வகையான பட்டதாரிகள்.

சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் இதர சேவைகள்

வேலைவாய்ப்புத் தேர்வு மட்டுமின்றி, இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கூடுதல் சேவைகளும் இந்த முகாமில் இலவசமாக வழங்கப்பட உள்ளன:

*வெற்றி நிச்சயம் திட்டம்: மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புத் திறன் குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.

* சுயதொழில் வாய்ப்பு: சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குத் தேவையான வங்கிக் கடன் வசதிகள் மற்றும் அரசு மானியங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.

* அயல்நாட்டு வேலைவாய்ப்பு:

வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோருக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

* அரசு போட்டித்தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி (TNPSC), வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசுப் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராவது குறித்த ஆலோசனைகள் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர்களால் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் பணியாளர்களைத் தேடும் தனியார் நிறுவனங்கள், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு வரும்போது கொண்டு வர வேண்டியவை

* புதுப்பிக்கப்பட்ட சுய விவர அறிக்கை (Resume/Bio-data).

 * கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்.

 * ஆதார் அட்டை நகல்.

 * பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

* முன் அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்கள்.

ஆட்சியரின் வேண்டுகோள்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். அதேபோல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலதிக விவரங்களுக்கு; வேலைநாடுநர்கள் 04364-299790 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: இந்த முகாமின் மூலம் தனியார் துறையில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.