மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்கு கணினி இயக்குபவர் பணியிடத்திற்கான அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட குழந்தைகள் நலக் குழு
தமிழகத்தில் கடைசி 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து துறைகளிலும் ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015 -ஆம் ஆண்டின் இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக குழந்தைகள் நலக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கணினி இயக்குநர் பணியிடம்
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலக் குழுவிற்கு கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் மற்றும் கல்வி தகுதிகள் இதற்கு மாதம் 11,916 ரூபாய் ஊதியத்தில் (1 பணியிடம்) தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Senior Grade) முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும். மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒர் ஆண்டு காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவம்
இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட இணையத்தில் (https://mayiladuthurai.nic.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-ம் தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல்-609 305 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.12.2024-ம் தேதி மாலை 5.00-மணிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.