மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மைய நிர்வாகி, Case Worker, பாதுகாவலர் மற்றும் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


பணி விவரம்:



  • மைய நிர்வாகி

  • மூத்த ஆலோசகர்

  • ஐ.டி. ஊழியர்

  • Case Worker

  • பாதுகாவலர் (Security Gurard)

  • உதவியாளர் (Multi-purupose Helper)


கல்வித் தகுதி:


மைய நிர்வாகி பணிக்கு சோசியல் வோர்க், சட்டம், சோசியாலஜி, சமூக அறிவியல், மன நலம் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


மூத்த ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க மனநலம் துறையில் டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நியூரோசயின்ஸ் படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஐ.டி. ஊழியர் பணிக்கு கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் டைப்பிங் முதுநிலை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


Case Worker பணிக்கு சமூக பணி அல்லது Development Managament பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணும் துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.


பணி நேரம்:



  • காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை 

  • நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை

  • இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை 


பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்த நேரத்தில் பணிக்கு அமர்த்தப்படுவர். கேஸ் வோர்க்கர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது


பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  பாதுகாவலராக இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.


பணி நேரம்: 



  • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

  • இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை


உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். வீடு, அலுவலகத்தை பராமரிக்கும் பணிகள் தெரிந்திருக்க வேண்டும்.


பணி நேரம்: 



  • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

  • இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை


இந்த மூன்று பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மதுரையில் வசிப்பவராக இருக்க வேண்டும். 



ஊதிய விவரம்:



  • மைய நிர்வாகி - ரூ.30,000/-

  • மூத்த ஆலோசகர்-ரூ.20,000/-

  • ஐ.டி. ஊழியர் - ரூ.18,000/-

  • Case Worker- ரூ.15,000/-

  • பாதுகாவலர் (Security Gurard) - ரூ.10,000/-

  • உதவியாளர் (Multi-purupose Helper) - ரூ.6,400/-


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்பங்களை சுயவிவர குறிப்புடன், தேவையான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 10.11.2023


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 


District Social Welfare Officer,


District Social Welfare Office,


Third Floor, 


Additional Building of Collectorate,


Madurai -20


அறிவிப்பின் முழு விவரத்திற்கு கிளிக் செய்யவும்- https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/10/2023102560.pdf