இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். 

Continues below advertisement

வேலைவாய்ப்புகளுடன் 250-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள்

மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கோரிப்பாளையம், மதுரையில் வருகின்ற 28.02.2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5000 வேலை வாய்ப்புகளுடன் 250-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ளன.

Continues below advertisement

எப்படி பதிவு செய்வது

இம்முகாமில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து தங்களது கல்விச்சான்றிதழ்கள் நகல் மற்றும் Bio- Data உடன் முகாமிற்கு வரவும் இம்முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. சென்னை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, தூத்துக்குடி, திருச்சி போன்ற பெருநகரங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதுமிருந்து தகவல் தொழில்நுட்பம், மூலதன பொருள்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி, வங்கிதுறை, ஆயுள்காப்பீடு, ஜவுளி, சில்லறை வணிகம், நிதி சேவைகள், மருத்துவத்துறை, உணவு உற்பத்தி ஆகிய 20-க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து 250 முன்னணி நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

உதவிதொகை விண்ணப்பபடிவம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். மேலும், இவ்வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித்தேர்வுகளுக்கு கோ.புதூரில் உள்ள இவ்வலுவலக தன்னார்வபயிலும் வட்டம் சார்பில் நடத்தப்படுகின்ற கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இலவசமாக பதிவு செய்யப்படுகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த மனுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவிதொகை விண்ணப்பபடிவம் இலவசமாக வழங்கப்படுகிறது.

உதவித்தொகையை பெற குடும்ப ஆண்டு வருமானம்

இந்த உதவித்தொகையை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000- மிகாமல் இருத்தல் வேண்டும். மாவட்ட திறன் அலுவலகம் சார்பில் இவ்வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி நிச்சயம்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை மற்றும் அரசு சான்றிதழுடன் கூடிய கட்டணமில்லா திறன் பயிற்சிக்கும் இம்முகாமில் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைநாடுநர்கள் அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் தவறாது கலந்து கொள்ளுமாறு” மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.