மதுரை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை கீழ் செயல்படும் அரசு  ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையம் போன்றவற்றில் உள்ள செவிலியர், சுகாதார மேலாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி விவரம்: 



  • சுகாதார மேலாளர் 

  • செவிலியர்

  • மருந்தாளுநர் 

  • ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்

  • பன்முக சுகாதார பணியாளர் 



கல்வித் தகுதி: 



  • செவிலியர், சுகாதார மேலாளர் பணியிடங்களுக்கு நர்ஸிங் படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை படித்திருக்க வேண்டும். இந்தத் துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருப்பது சிறந்தது. 

  • மருந்தாளுநர் பணிக்கு பார்மஸி துறையில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

  • ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு +2 படித்திருக்க வேண்டும். ’Medical Lab Technology Course’ படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் அவசியம்.



ஊதிய விவரம்: 



  • செவிலியர் / சுகாதார மேலாளர் - ரூ. 25,000

  • மருந்தாளுநர் - ரூ.15,000

  • ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.13,000

  • பன்முக சுகாதார பணியாளர் - ரூ.8,500


இந்த பணியிடங்கள் தற்காலிகமானது மட்டுமே. பணிவரன்முறை, நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


எப்படி விண்ணப்பிப்பது? 


இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்: 



  • கல்வித் தகுதி சான்றிதழ் (10, 12, வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு)

  • மதிப்பெண் பட்டியல்

  • முன் அனுபவச் சான்றிதழ்

  • விதவை சான்றிதழ்

  • இருப்பிட சான்றிதழ்


வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/15coVLvfavvAofZmAgpWGq8xMWbpV7FIR/viewஎன்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.


விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: 


மாநகர் நல அலுவலர், 
3வது தளம், பொது சுகாதார பிரிவு, 
’அறிஞர் அண்ணா மாளிகை’
மாநகராட்சி மைய அலுவலகம், தல்லாகுளம், மதுரை - 625 002


விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2023




இதையும் படிங்க:


LIC Apprenticeship: மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத்தொகை; காப்பீட்டு நிறுவனத்தில் வேலை- முழு விவரம்!


ஆகாயத்தாமரையில் இருந்து அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை - 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு