சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் தற்காலிகமாகப் பணியாற்ற காலியாக உள்ள 61 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 


எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இதில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் தற்காலிகமாகப் பணியாற்ற காலியாக உள்ள 61 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தத் தேர்வுக்கு நெட் / ஸ்லெட் / செட் அல்லது பிஎச்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்காலிகமாக 120 நாட்களுக்கு (1 செமஸ்டர்) பணி வழங்கப்படும். இதற்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். 


படிப்புத் தகுதி மற்றும் யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். 


Reservation in Higher Education | ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லையா?- மத்திய அரசு விளக்கம்


உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அவற்றைப் பூர்த்தி செய்து வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வர்கள் தங்களுடைய உதவிப் பேராசிரியர் காலிப் பணி இடங்களுக்கான விண்ணப்பங்களை, 
The Registrar, 
University of Madras, 
Chepauk, 
Chennai - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 


விண்ணப்பத்தைப் பிரதி எடுத்து, 5 பிரதிகளுடன் தேவையான கல்வி, வயது சான்றிதழ்களுடன் தற்போது பணியாற்றி பெற்று வரும் ஊதிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய கல்வி செய்திகளைஅறிய Abpnadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தில் தொடரவும்.