சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Interpreter
(தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி, மலையாளம்)
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க 10 + 2 + 3 என்ற முறையில் படித்திருக்க வேண்டும்.
- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்க்க தெரிந்திருக்க வேண்டும். இந்த மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக Pay Level-22 ரூ.56,100 - ரூ.2,05,700/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு முடிவுகள் அறிவிப்புகளை https://www.mhc.tn.gov.in/recruitment/login - என்ற இணைப்பை களிக் செய்து காணவும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.1,000/- கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம்:
முதன்மை தேர்வு பாடத்திட்டம்:
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான அறிவிப்பை https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20NO.233%20OF%202024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.07.2024
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 30.07.2024