சென்னை உயர் நீதிமன்றத்தில் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில்  உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • நகல் பரிசோதகர்

  • நகல் வாசிப்பளர் 

  • முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்

  • இளநிலை கட்டலை நிறைவேற்றுனர்

  • கட்டளை எழுத்தர்

  • ஒளிப்பட நகல் எடுப்பவர்

  • ஓட்டுநர்

  • அலுவலக உதவியாளர்

  • தூய்மைப் பணியாலர்

  • தோட்டப் பணியாளர்

  • காவலர் / இரவு காவலர்

  • இரவு காவலர் மற்றும் மசால்ஜி

  • காவலர் மற்றும் மசால்ஜி

  • தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி

  • வாட்டர்மென் / வாட்டர்வுமன்

  • மசால்ஜி


மொத்த பணியிடங்கள் - 2,329


கல்வித் தகுதி:



  • நகல் பரிசோதகர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு அல்லது உயர்நிலைப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ஒளிப்பட நகல் எடுப்பவர் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, 6 மாதங்களுக்கு குறையாத செய்முறை முன் அனுபவம் இருக்க வேண்டும். 

  • ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டர் வாகனச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் ஓட்டுவதற்குரிய செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்களுக்கு குறையாமல் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • நகல் பிரிவு உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  • தூய்மை பணியாளர். தோட்டப் பணியாளர், காவலர், காவலர் மற்றும் மசால்ஜி, துப்புரவு பணியாளர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென், வாட்டர் வுமென், மசால்ஜி ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்



  • நகல் பரிசோதகர் - ரூ.19,500 -71,900/-

  • நகல் வாசிப்பளர் -ரூ.19,500 -71,900/-

  • முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் -ரூ.19,500 -71,900/-

  • இளநிலை கட்டலை நிறைவேற்றுனர் -ரூ.19,500 -71,900/-

  • கட்டளை எழுத்தர் - ரூ.16,600 -60,800/-

  • ஒளிப்பட நகல் எடுப்பவர் -ரூ.16,600 -60,800/-

  • ஓட்டுநர் --ரூ.19,500 -71,900/-

  • அலுவலக உதவியாளர் - ரூ.15,700 -58,100/-

  • தூய்மைப் பணியாலர் -ரூ.15,700 -58,100/-

  • தோட்டப் பணியாளர் -ரூ.15,700 -58,100/-

  • காவலர் / இரவு காவலர் -ரூ.15,700 -58,100/-

  • இரவு காவலர் மற்றும் மசால்ஜி -ரூ.15,700 -58,100/-

  • காவலர் மற்றும் மசால்ஜி -ரூ.15,700 -58,100/-

  • தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி -  ரூ.15,700 -58,100/-

  • வாட்டர்மென் / வாட்டர்வுமன் -ரூ.15,700 -58,100/-

  • மசால்ஜி -ரூ.15,700 -58,100/-


விண்ணப்பிக்கும் முறை:


https://mhc.tn.gov.in/recruitment/login -என்ற இணையதளத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


தெரிவு செய்யப்படும் முறை:


பொது எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.05.2024


தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - 27.05.2024


விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://mhc.tn.gov.in/recruitment/notification_dist - என்ற இணைப்பை க்ளிக் செய்து தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு விவரத்தை காணலாம். 




அனைத்து மாவட்டங்களில் உள்ள நீதித்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரபப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். அதில், மாவட்டங்களை தேர்ந்தெடுத்து காண வேண்டும்.