இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ( LIC ) அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் ( ADO ) முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது.
பிரிலிம்ஸ் தேர்வு 2023 க்கான அட்மிட் கார்டு, இன்று ( மார்ச் 4 )வெளியாகியுள்ளது. ADO பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் licindia.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் அட்மிட் கார்டை எப்படி பதிவிறக்கம் செய்து கொள்வதை தெரிந்து கொள்வோம்
1. எல் எல்.ஐ.சியின் ( licindia.in ) அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.
2. முகப்பு பக்கத்தில் உள்ள எல்.ஐ.சி ஏ.டி.ஓ Admit card 2023 இணைப்பைக் கிளிக் செய்க.
3. லாக் இன் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
4. இதையடுத்து, உங்கள் அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
5. அட்மிட் கார்டை சரிபார்த்து, அதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
தேர்வர்கள், தேர்வுக்கு செல்லும்போது அட்மிட் கார்டை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.
பணி குறித்த விவரம்:
Recruitment of Apprentice Development Officer: நாட்டின் பொதுத்துறை நிறுவனமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில்( எல்.ஐ.சி.) காலியாக உள்ள 9 ஆயிரத்து 394 தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
( பிரிலிம்ஸ் தேர்வு ) முதல்நிலைத் தேர்வானது, மார்ச் 12-ம் தேதி நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், ஏப்ரல் 23ல் நடக்கும் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
பிரிலிம்ஸ் தேர்வில் ரீசனிங் எபிலிட்டி, நியூமரிக்கல் எபிலிட்டி மற்றும் ஆங்கில மொழி என மூன்று பிரிவுகள் இருக்கும்.
கேள்விகளின் எண்ணிக்கை 100 மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் 70 ஆகும்.
வினாத்தாளின் காலம் ஒரு மணி நேரம் மற்றும் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிகளில் இருக்கும்.
பணி இடங்கள்:
இதற்கு மத்திய, தென், கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். எல்.ஐ.சி. தென்மண்டலத்தில் மட்டும் தோராயமாக 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு மற்றும் நியமனங்களில், அரசின் இட ஒதுக்கீட்டு முறை உட்பட்ட அரசின் விதிகளின்படி வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
பயிற்சிக் காலத்தில், அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ,மாத உதவித் தொகையாக (Stipend) சுமார் ரூ.51,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அதிகாரியாக பதவி பெற்றவுடன் (Probationary Development: Officer), Gratuity, Defined Contiributory Pension Scheme, LTC, Group Insurance, உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனும், வளர்ச்சி அதிகாரியாக (Development Officer) 'பணி நிரந்தரம் பெற்றால், இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (Performance Linked Incentives) பெறவும் தகுதி பெறலாம்.