கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது.



  


கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. 


தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை) பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பணிக்காலியிடம் மற்றும் தேர்விற்கு https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 01.06.2023 முதல் 30.06.2023 வரை விண்ணப்பிக்கவும். 




இத்தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 12.05.2023 அன்று காலை தொடங்கப்பட உள்ளது. இலவசபயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் மனுதாரர்கள் 2 Passport Size புகைப்படம் மற்றும் ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.


இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04324-223555  என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்அடங்கிய சுயவிவரத்தினை பதிவுசெய்து பயன்பெறலாம்.


மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.




அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்விதொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஊக்கஉரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் இதன் மறுஒளிபரப்பு பிற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது, இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.