Indian Navy Agniveer: இந்திய கடற்படையில் இணைய விருப்பமா..? அக்னிபத் திட்டத்திற்கு உடனே விண்ணப்பிங்க..!

Indian Navy Agniveer : அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் இணைவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

Continues below advertisement

கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர் (எஸ்.எஸ்.ஆர்) 2023-ம் ஆண்டுக்கான  வீரர்கள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியது. கடற்படையில் மூத்த இரண்டாம் நிலை ஆட்சேர்ப்பு பிரிவில் கடற்படையில் உள்ள கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை அடங்கிய தொழில்நுட்ப ரீதியான பணியில் சேர அக்னி வீரர்களுக்கு பணி. இதன் மூலம் 1400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Continues below advertisement

இதில் 280 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் 100 பேர் தேந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்ததையெடுத்து, விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றியமைக்கப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

அக்னிவீர் திட்டம்:

இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 

அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி :

அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 

இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
ஆட்கள் சேர்ப்பு:

அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும். 

பிற பயன்கள் என்ன?

பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு:https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/861_1_Terms_and_Conditions_for_Agnipath_Scheme.pdf

கடற்படையில் அக்னிவீரர்கள் தேர்வு:

பணி விவரம்:

அக்னிவீர் கடற்படை

மொத்த பணியிடங்கள்: 1400 ( Agniveer (SSR) – 01/2023 )

பணியிடங்கள்-  100 for (Agniveer (MR) – 01/2023 batch )

வயது வரம்பு: 

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01 மே 2002  முதல் 31 அக்டோபர் 2005 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கணக்கு மற்றும் இயற்பியல் பாடத்திட்டத்தை படித்தவராக இருக்க வேண்டும் அல்லது உயிரியல், வேதியியல், கணினி அறிவியல் பாடத்திட்டத்தைப் படித்தவராக இருக்க வேண்டும். 10+2 என்ற முறையில் 12-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

கவனிக்க:

 திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் கர்ப்பிணி பெண்கள் யாரும் இதற்கு  விண்ணப்பிக்க கூடாது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகளிலோ அல்லது பயிற்சியின் போது பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களின் பயிற்சி/தேர்வு உடனடியாக ரத்து  செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி விவரம்:


 

தேர்வு செய்யப்படும் முறை:

 கணினி வழி எழுத்துத் தேர்வு, PFT (Physical Fitness Test) மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:


 

விண்ணப்பிக்கும் முறை:

அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் அக்னிவீரராக பணிபுரிய விண்ணப்பிக்க  www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.550 அதோடு 18% ஜி.எஸ்.டி. வரியுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க https://www.joinindiannavy.gov.in/en/page/agniveer-ways-to-join.html என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்யவும்.

கவனிக்க:

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் உடல் முழுவதும் டாட்டூ போட்டிருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் -28.12.2022

2023 ஆம் ஆண்டிற்கான பேட்ச் வீரர்களுக்கு அடுத்தாண்டு மே மாதம் முதல், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஐ.என்.எஸ். சிக்லா-வில் (INS Chilka, Odisha)பயிற்சிகள் தொடங்கும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கியமான தகவல் குறித்த முழு விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்  http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_15_2223b.pdf-லிங்கை கிளிக் செய்து காணலாம்.

ஆல் தி பெஸ்ட்..


 

Continues below advertisement
Sponsored Links by Taboola