இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை (Indian Air Force) சார்பில் அக்னிவீர் வாயு (Agneeveer Vayu) OS Trade வகுப்பிற்கான திறந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படைத் தேர்வுக் கூடமான 8 Airmen Selection Centre, Air Force Station, Tambaram – 600046 இல் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு (ஸ்ரீவிஜயபுரம்)- களில் உள்ள தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதில் ஆண் விண்ணப்பதாரர்கள் 02.09.2025, காலை 04.00 மணிக்கும், பெண் விண்ணப்பதாரர்கள் 05.09.2025, காலை 05.00 மணிக்கும் கலந்து கொள்ளலாம் எனவும், மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள பின்வரும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்புக்கு சமமான (ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்) மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

01.01.2026 தேதியின்படி 17½ ஆண்டுகளுக்கு மேற்பட்டும், 21 ஆண்டுகளுக்குட்பட்டும் இருக்க வேண்டும். மேலும் இம்முகாம் பற்றிய அறிவிக்கை மற்றும் முழு விவரங்களை அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய விமானப்படையில் சேவை செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.