Job Fair: தனியார்துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் - எங்கு, எப்போது தெரியுமா?

தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Continues below advertisement

தேனி மாவட்டம்,  வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.11.2024  வெள்ளிக்கிழமை அன்று  காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

Continues below advertisement

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.


இம்முகாமில் 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்பு படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!

எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன்  தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

Chennai Rains: "நாங்க தயாரா இருக்கோம்! ஆனா பெரிய மழை இல்லை" ஆய்வு செய்தபின் துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி!


மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி (04546 – 254510 அல்லது  94990 55936)  எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள்  பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola