திருச்சி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் குற்ற வழக்குகளில் சட்ட உதவி விவகாரங்களை கையாளும், சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.60,000/-
கல்வி தகுதி:
குற்றவியல் சட்டத்தில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பயிற்சி. குற்றவியல் நீதிமன்றத்தில் குறைந்தது 20 குற்ற வழக்குகளை கையாண்ட அனுபவம் இருக்க வேண்டும்.
Assistant Legal Aid Defense Counsel
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000
கல்வி தகுதி:
குற்றவியல் சட்டத்தில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை பயிற்சி.
வழக்குகள் குறித்து எழுதும் திறன் பெற்று இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் அல்லது கிளார்க்
சம்பளம்: மாதம் ரூ.20,000
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்கும் அளவு திறன் பெற்று இருக்க வேண்டும்.
கணினி பயன்பாட்டுத் திறன் இருக்க வேண்டும்.
வரவேற்பாளர்- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
கல்வி தகுதி:
தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தும் திறன் பெற்று இருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு..
அலுவலக பியூன்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.14,000
கல்வி தகுதி:
8வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சுகாதாரம் சார்ந்த பணிகள் செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது...
தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இதன் விரிவான அறிவிப்பை இங்கே கிளிக் செய்து படித்துவிட்டு https://districts.ecourts.gov.in/tiruchirappalli https://districts.ecourts.gov.in/tiruchirappalli
இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் தேவையான தகுதி சான்றிதழ்களை சுய ஒப்பம் இட்டு இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி..
தலைவர், தலைமை மாவட்ட நீதிபதி,
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,
ஏடிஆர் கட்டிடம், மாவட்ட நீதிமன்ற வளாகம், திருச்சி
மேலும், கடைசி தேதி 2.9.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி இருக்க வேண்டும்.