தமிழக வனத்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழகத்தில்  மேற்குத்தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் கடற்கரைப்பிரதேசங்கள் போன்ற வளமான காடுகளைக்கொண்ட  இயற்கை பூமியாக உள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் தமிழக வனத்துறையின் பங்கு அளப்பெரிதாக உள்ளது. குறிப்பாக வனங்கள்  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சூழலியல் பாதுகாப்பு, நீர் மற்றும் உணவு பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதுடன், வனத்தையொட்டி வாழும் மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரப்பாதுகாப்பினையும் இத்துறை உறுதி செய்கிறது. மேலும் வனத்தில் உள்ள மருத்துவத்தாவரங்கள், பராம்பரிய மருத்துவ முறைகளைச்சார்ந்து வாழும் பல லட்சம் மக்களுக்கு சுகாதாரப்பாதுகாப்பினை வனத்துறை திறம்பட மேற்கொண்டுவருகிறது. இதோடு வனத்துறையில்  பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது Junior Research Fellowship க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.



தமிழக வனத்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்:


பணி: Junior Research Fellowship


காலிப்பணியிடம் : 3


தகுதி : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதோடு ரிசர்ஜ் பிரிவுகளில் ஒரு ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : Junior Research Fellowship-க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்க்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விபரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ் மற்றும் ஆவணங்களை இணைத்து aiwcrte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


Internship Programme க்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடம் : 8


வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்க்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விபரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் மற்றும் ஆவணங்களை இணைத்து aiwcrte@gmail.com   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.



தேர்வு முறை : தமிழக வனத்துறையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கும் தகுதியானவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை https://www.aiwc.res.in/assets/images/AIWC_Internship_Programme_Notification.pdf என்ற இணையதள முகவரியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.