தஞ்சாவூர்: சேலம், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிள் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம். இன்னும் 3 நாட்களே உள்ளது. உடனே விண்ணப்பம் செய்திடுங்கள்.

Continues below advertisement

பதவி மற்றும் காலியிடங்கள் குறித்த முழு விவரங்கள் உங்களுக்காக!!!

பணி: உதவி பேராசிரியர் (Assistant Professor)

Continues below advertisement

காலியிடங்கள்: 34

1. Veterinary Pharmacology and Toxicology - 1

2. Veterinary Public Health and Epidemiology - 1

3. Veterinary Parasitology - 2

4. Livestock Products Technology -2

5. Veterinary and Animal Husbandry Extension Education -2

6. Veterinary Surgery and Radiology - 9

7. Veterinary Medicine - 8

8. Veterinary Gynaecology and Obstetrics - 7

சம்பளம்: மாதம் ரூ.57,700

தகுதி: குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.வி.எஸ்சி.,, ஏ.எச் மற்றும் பி.வி.எஸ்சி படிப்பை முடித்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று ASRB-NET/UGC-CSIR-SIR-NET போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 29. 7.2025 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இடம்: Veterinary College and Research Institute, Veerapandi, Theni 625534.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

இன்னும் 3 நாட்களே உள்ளது. இன்னும் விண்ணப்பங்கள் அனுப்பாதவர்கள். உடனே அனுப்பி பயன் பெறுங்கள்.