ஹைதராபாத் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சிப் பொறியாளர் மற்றும் திட்டப்பொறியாளர் என 84 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதி என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹைதராபாத்தில் உள்ள BEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சிப் பொறியாளர் மற்றும் திட்டப் பொறியாளர்  என 84 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்



ஹைதராபாத் BHEL நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள்- ஒப்பந்த அடிப்படையில் 84 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


கல்வித்தகுதி:


பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)-I (எலக்ட்ரானிக்ஸ்):


 விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc Eng மற்றும் 1 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


 ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I (எலக்ட்ரானிக்ஸ்) (Project Engineer): BHEL நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc Engg மற்றும் 2 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


 விண்ணப்பக்கட்டணம்:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SBI Collect மூலம் ஆன்லைன் வழியாக அல்லது எஸ்பிஐ கிளை மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.


பயிற்சி பொறியாளர் – I க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 200/-ம், ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 500/-ம் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.


மேலும் PWD/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணம் இல்லை.


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களிலும், self-attested செய்து விண்ணப்பத்தை ஸ்பீடு ஸ்போஸ்ட் அல்லது கூரியர் மூலமாக வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


General Manager (HR),


Bharat Electronics Limited,


I.E Nacharam,


Hyderabad-500076,


 Telangana.





தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.


அதில் தேர்வாகும் நபர்கள் மட்டும் பணி அமர்த்தப்படுவார்கள்.


சம்பளம்:


பயிற்சி பொறியாளர்-I (Trainee Engineer)-:


பெல் நிறுவனப்பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.25,000, இரண்டாம் ஆண்டு ரூ.28,000 மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு ரூ. 31,000 என மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ப்ராஜெக்ட் இன்ஜினியர்–I (Project Engineer)::


தேர்வாகும் நபர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.35 ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ. 40 ஆயிரம், மூன்றாம் ஆண்டுக்கு ரூ.45,000 மற்றும் 4 வது ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் என மாத ஊதியம் வழங்கப்படவுள்ளது.


எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப்பயன்பெறுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்புக்குறித்த கூடுதல் விபரங்களை https://bel-india.in/ என்ற இணைப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.