தமிழ்நாடு அரசின் கீழ் மதுரை மாவட்ட குழந்தைகள் இல்லத்தில் உளவியலாளர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.
மதுரையில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
பணி விவரம்:
ஆற்றுப்படுத்துனர் - உளவியலாளார்
பணி இடம்:
மதுரை மாவட்டம்
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
மதுரையில் அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்கப்படுகிறது. இங்கு மூன்று உளவியலாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு மதிப்பூதியம் (Honorarium) அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Counseling psychology)
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களை கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் மாதம் ஐந்து தினங்களுக்கு, நாளொன்றுக்கு ரூ.1000/- ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்ப படிவத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் 18-08-2023 மாலை 5.30 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
கண்காணிப்பாளர்,
அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்,
டாகடர்.தங்கராஜ் சாலை,
கே.கே.நகர்,
காந்தி மியூசியம் அருகில்,
மதுரை -20
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-08-2023
******
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மாநகர சமூக பாதுகாப்பு பிரிவில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Programme Officer - PO
Assistant cum Data Entry Operator - DEO
கல்வித் தகுதி:
- PO பணியிடத்திற்கு விண்ணப்பிக்க Social Work /Sociology/ Child Development/Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management உள்ளிட்ட இந்த ஏதேனும் துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இளங்கலை படித்தவர் என்றால் Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management இந்த துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- DEO பணிக்கு விண்ணப்பிக்க +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
PO பதவிக்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
DEO - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Programme Officer - PO - ரூ.34,755/-
Assistant cum Data Entry Operator - DEO -ரூ.13,240/-
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://urxl.com/SCPS2023 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். தொடர்புக்கு - recruitmentscps@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.08.2023 மாலை 5.30 வரை
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/announcement/2023_TNSCPS_vacant_recruitment.pdf - என்ற இணைப்பை களிக் செய்து காணவும்.