சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு...
கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 89 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, டிபார்ம், டிஜிஎன்எம் முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்களை வெளிடப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலச்சங்கம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் செயல்படும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்தா பிரிவு அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 89 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம் மற்றும் சம்பளம்:
Special Educator for Behavior Therapy 23,000/ சம்பளமாக வழங்கப்படுகிறது.
Occupational Therapists - 23,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது
சமூக சேவகர் பணிக்கு - ரூ.23,800/- சம்பளம் வழங்கப்படுகிறது.
சமையல்காரர் - ரூ.8,500/-
அலுவலக உதவியாளர் - ரூ.13,000/- மற்றும் மேலும் சில பணிகள் உள்பட வழங்க இருக்கிறது.
கல்வித் தகுதி:
பணியின் தன்மைக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டி பார்ம், டிஜிஎன்எம் முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன.
வேன் டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம். பார்மசிஸ்ட் பணிக்கு பிளஸ் டூவுடன் டிபார்ம் முடித்து இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் மருத்துவமனை பணியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். இந்த பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (district health Society),
மாவட்ட சுகாதார அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி 606 213. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.