சவுதி அரேபிய அமைச்சத்தில் பெண் செவிலியர்களாக பணி செய்வதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான் முழு விவரங்களை இங்கே காணலாம்.


சவுதி அரேபியாவில் வேலை


தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


நேர்காணல் நடைபெறுவதன் விவரம்


சவுதி அரேபிய அமைச்சகம் பெண் செவிலியர்களுக்கான நேர்காணலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கான நேரம் மற்றும் இடம் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இதற்கு விண்ணப்பிக்க - சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 


ஊதிய விவரம்:


இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


தொடர்பு எண்கள்


9566239685, 6379179200


044-22505886 - 044-22502267 


இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.   அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது என்று அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


******


மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


பகுதிநேர  Medical Referee


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


ஊதிய விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க ரூ.35,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 


ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மாதத்திற்கு 15 செசென்ஸ் இருக்க வேண்டும். 


திங்கள் முதல் வெள்ளி வரை 10.00 முதல் 06:00 வரை பணி இருக்கும். 


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு இ.எஸ். ஐ. அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 


நேர்காணல் நடைபெறும் நாள்:


25.ஆக்ஸ்ட்,2023 காலை 11 மணி முதல்


முகவரி:


Sub Regional Office, Coimbatore
Employees State Insurance Corporation
Panchdeep Bhavan, # 1897, Trichy Road, Ramanathapuram
Coimbatore, TN – 641 045 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://srocoimbatore.esic.gov.in/attachments/circularfile/3a827f83ca3067f6d63701a458cd1481.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.