மத்திய அரசின் ஹெச்எஸ்சிசி (HSCC) நிறுவனத்தில் மேனேஜர், சீனியர் மேனேஜர் பணியிடத்தை நிரப்ப இருக்காங்க. ஆரம்பமே ரூ.60,000 சம்பளமாம். கடைசி தேதி இம்மாதம் 29ம் தேதியாம். மிஸ் பண்ணாதீங்க. உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
மத்திய அரசின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகத்தில் உள்ள மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பல்துறைகளில் பொறியியல் மற்றும் எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறையின் கீழ் நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (NBCC) செயல்படுகிறது. இதனின் கீழ் செயல்படும் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகம் (HSCC), சுகாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஜென்ரல் மேனேஜர், டெபியூட்டி ஜெனரல் மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனரல் மேனேஜர் (சிவில்) 1டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (சிவில்) 1டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (நிதி) 1சீனியர் மேனேஜர் (சிவில்) 2சீனியர் மேனேஜர் (HRM) 1மேனேஜர் (நிதி) 1டெபியூட்டி மேனேஜர் (மெக்கானிக்கல்) 1டெபியூட்டி மேனேஜர் (Company Secretary) 1 என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க.
ஜெனரல் மேனேஜர் பதவிக்கு அதிகப்படியாக 49 வயது வரை இருக்கலாம். டெபுடி ஜெனரல் மேனேஜர் பதவியில் சிவில் மற்றும் நிதி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயது வரையும், சீனியர் மேனேஜர் பதவிக்கு 41 வயது வரையும் இருக்கலாம். இதர பிரிவுகளுக்கு 33 வயது வரை இருக்கலாம். சீனியர் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 41 வயது வரை இருக்கலாம்.
ஜெனரல் மேனேஜர் பதவிக்கு சிவில் பொறியியலில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முழு நேர டிகிரி தேவை. மேலும் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டெபுடி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு சிவில் மெக்கானிக்கல் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு, CS, ICAI/ICWAI அல்லது எம்பிஏ ஆகியவற்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சீனியர் மேனேஜர் பதவிக்கு சிவில் மற்றும் எம்பிஏ அல்லது 2 ஆண்டு மேனேஜ்மெண்ட் சார்ந்த பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேனேஜர் பதவிக்கு ICAI/ICWA அல்லது எம்பிஏ ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
ஜெனரல் மேனேஜர் - ரூ.90,000 - 2,40,000டெபுடி ஜெனரல் மேனேஜர் - ரூ.80,000 - 2,20,000சீனியர் மேனேஜர் - ரூ.70,000 - 2,00,000மேனேஜர் - ரூ.60,000 - 1, 80,000டெபுடி மேனேஜர் - ரூ.50,000 - 1,60,000
இப்பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பத்தின் எண்ணிக்கையை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் முறை முடிவெடுக்கப்படும். ஒன்று, தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படலாம் அல்லது திறன்/ எழுத்துத் தேர்வு உடன் குழு கலந்துரையாடல்/ நேர்காணல் ஆகியவற்றில் மூலம் தேர்வு செய்யப்படலாம்.
மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள் https://www.hsccltd.co.in/career.html என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாற்றுத்திறனாளிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் இடஒதுக்கீடு மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும். இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 13 முதல் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே அருமையான வாய்ப்பை இழந்து விடாதீர்கள். உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.